Friday, April 15, 2011

அம்மன் பட வில்லன் நடிகர் காலமானார்

[ Friday, 15 April 2011, 08:15.58 AM GMT +05:30 ]
தமிழில் அம்மன் படத்தில் நடித்த பிரபல வில்லன் நடிகர் ராமி ரெட்டி (52) உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
பத்திரிகைத்துறையில் பணியாற்றிய ராமிரெட்டி, டைரக்டர் கோடி ராமகிருஷ்ணாவுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து டாக்டர் ராஜசேகரின் அங்குசம் படத்தில் வில்லனாக நடித்தார்.

அந்த படத்தில் ராமியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் போஜ்புரி படங்களில் நடித்தார்.

கிட்டத்தட்ட 250க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கும் ராமி ரெட்டி கடந்த சில மாதங்களாகவே சிறுநீரகம் மற்றும் கல்லீரல கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நோயின் பாதிப்பு தீவிரமானதால்‌ செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். நடிகர் ராமிரெட்டிக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

1 comment:

  1. [ Friday, 15 April 2011, 08:15.58 AM GMT +05:30 ]

    ReplyDelete