Thursday, April 28, 2011

புத்தம் புதிய படங்களை இலவசமாக தரவிறக்கம் செய்வதற்கு

 நாம் இணையத்தில் இருந்து மென்பொருட்களையோ அல்லது சினிமா படங்கள் போன்ற பெரிய கோப்புகளை தரவிறக்கம் செய்யும் போது அவைகளை டோரென்ட் கோப்புகளாக தரவிறக்கம் செய்வோம்.
டோரென்ட் கோப்புகளில் இருந்து நம் கணணியில் நேரடியாக தரவிறக்கம் செய்ய முடியாது. அதற்கு தான் அனைவரும் இந்த U Torrent மென்பொருளை பயன்படுத்தி தரவிறக்கம் செய்கிறோம்.
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமான மென்பொருளாகும். தற்போது இந்த மென்பொருளின் உள்ள வசதிகளை மேம்படுத்தி தனது புதிய பதிப்பை(U Torrent 3.0 Beta) இந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதனை கணணியில் நிறுவிக் கொள்ள
1. முதலில் கீழே உள்ள தரவிறக்கச் சுட்டியை அழுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
2. பின்பு வரும் .exe கோப்பை இரண்டு முறை க்ளிக் செய்து மென்பொருளை கணணியில் நிறுவுங்கள்.
3. மென்பொருளை நிறுவும் போது கீழே உள்ள படங்களின் படி டிக் மார்க்கை நீக்கி விடவும்.



4. இந்த இரண்டு படங்களில் உள்ள விண்டோ வரும் போது மட்டுமே இதில் உள்ள மாதிரியே டிக் குறியை நீக்கி விடவும்.
5. மற்ற விண்டோக்களில் Next கொடுத்துக் கொண்டு செல்லலாம்.
6. முடிவில் இன்ஸ்டால் என்ற பட்டனை அழுத்தியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியில் இணைந்து விடும்.
7. இனி இந்த மென்பொருளை பயன்படுத்தி இணையத்தில் இருந்து கோப்புகளை சுலபமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: புதிய பதிப்பில் ஒரு சூப்பர் வசதிகள் உள்ளது. அதாவது நாம் ஏதேனும் ஒரு வீடியோ அல்லது ஓடியோ கோப்பை தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போதே அந்த கோப்பை ஓபன் செய்து வீடியோ சரியாக இயங்குகிறதா என பார்த்து கொள்ளலாம்.
இதனால் நாம் தரவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போதே அந்த வீடியோ சரியாக இயங்கவில்லை, அந்த வீடியோவின் தரம் பிடிக்கவில்லை என்றால் அப்பொழுதே அதன் தரவிறக்கத்தை நிறுத்தி விடலாம். இதனால் நம் நேரமும் இணைய உபயோகமும் சேமிக்கப்படும்.
இன்னொரு வசதி நாம் தரவிறக்கம் செய்யும் வீடியோவுக்கு இந்த மென்பொருளிலேயே மதிப்பெண்(Ratings) கொடுக்கலாம். இதனால் தரம் குறைந்த வீடியோக்கள் தவிர்க்கப்படும் மற்றும் நாம் தரவிறக்கம் செய்யும் வீடியோவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும் உள்ளது.

தரவிறக்க சுட்டி

No comments:

Post a Comment