Thursday, March 31, 2011

பிரித்தானியாவில் அகதி நிலை மறுக்கப்பட்டோரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு எதிராக குரல்கொடுப்போம்.

ஓடியோ இணைப்பு
பிரித்தானியாவில் அகதி நிலை மறுக்கப்பட்டோரை சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைக்கு எதிராக குரல்கொடுப்போம். (ஓடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் அகதிகளாக தம்மை பதிவுசெய்த இலங்கைத் தமிழர்களில் சிலரது அனுமதி நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக விமானநிலையத்திற்கு அருகாமையில் உள்ள உயர் பாதுகாப்புத் தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டுள்ளனர்.


இவ்வேளையில் அவர்களின் இந்த நிலையை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு, அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கூடாது என்றும், அவர்களை திருப்பி அனுப்பினால் அவர்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்பதையும், அப்படி திருப்பி அனுப்பும் பட்சத்தில் அவர்களின் உயிருக்கு ஏதேனும் நடக்கும் பட்சத்தில் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிய நாடுகளே முழுப் பொறுப்பையும் எடுக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தவேண்டிய தேவை உலகப் பரப்பெங்கும் பரந்து வாழும் தமிழர்களின் கடைமையாக உள்ளது.

பிரித்தானியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலையை உடனும் அவதானித்து உடன் நடவடிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டதனால் திருப்பி அனுப்பும் முயற்சி தற்காலிகமாக தாமதமாக்கப்பட்டுள்ளது. அவர்களை எப்படியாவது இலங்கைக்கு திருப்பி அனுப்பாது பாதுகாத்து பிரித்தானியாவிற்குள் வைத்திருப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசின் உள்த்துறை அமைச்சின் செயலரும், சட்டத்தரணியுமான வாசுகி முருகதாஸ் அவர்கள் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருவது பாராட்டுதற்குரியதே.

இந்த நிலையில் பிரித்தானியாவில் அகதிநிலை மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படும் நிலையில் உள்ள தமிழர்களைப் போல் உலகின் பல நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை கண்டித்தும், அவ்வாறான செயற்பாட்டை தடுக்கவும் அனைத்து மக்களும் ஒன்றுதிரண்டு அந்தந்த நாடுகளில் உள்ள அரசிற்கு சரியான விளக்கங்களையும், அழுத்தங்களையும் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

இதற்கு முன்னுதாரணமாக பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலையை வெளிக்கொணர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களூடாக விமான நிலையங்களில் எந்தநேரமும் திருப்பி அனுப்பப்படலாம் என்ற பயத்தோடு இருக்கும் எம் உறவுகளையும், அவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்கும் பொருட்டு பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினராகிய நாம் இந்த அவசர அறிவிப்பை விடுக்கிறோம்.
31 Mar 2011

No comments:

Post a Comment