Saturday, March 26, 2011

அமரிக்க ஏகாதிபத்திய அராஜகமும் அதன் அடிவருடிகளின் நியாயப்படுத்தல்களும்!

அமரிக்க அராஜகம் என்பது என்றும் புதியதல்ல,ஆங்கில,ஸ்பானிய,பிரான்ச்சை சேர்ந்த கொலைக்குற்றவாளிகளை அந்நாட்டு அரசுகள் அமரிக்காவில் அத்துமீறி அந்நாட்டவரின் விருப்புக்குமாறாக கொன்று அடக்கி குடியேறினார்கள்,அவர்களின் வாரிசுகளும் அவர்களுக்கு அடிமைகளான ஆபிரிக்க,ஆசிய மக்களுமே இன்று உலகில் அராஜகங்களை சட்டத்தின் காவலர் என்ற பெயரில் செய்கின்றனர்.உலகில் பல்வேறு கலை,கலாச்சாரங்கள் இருந்தபோதும் ஐரோப்பிய அடக்குமுறைக்கு உள்ளாகி இன்றும் மனத்தால் ஐரோப்பியருக்கு அடிமைக்களாக வாழும் நம்மை போன்றவர்கள் கொடுக்கும் ஆதரவுடன் நம் கலாச்சாரங்களை அழித்து,நம் சட்டதிட்டங்களை காட்டுமிராண்டிகளின் ஓலமாக்கி தமது சட்டங்களால் உலகை ஆட்டிப்படைக்க ஐரோப்பிய அமரிக்க ஆதிக்கம் கங்கணம் கட்டிநிற்கின்றது.அதை எதிர்ப்பவர்களை சர்வாதிகாரிகள்,பயங்காரவாதிகள் பட்டங்களை சூட்டி தமது பணமூலம் உருவாக்கிய ஐக்கியநாடுகள் சபை ஊடாக அடக்கி அழித்து வருகின்றது!உலகில் முதன்முதலில் மனிதஉரிமை மீறலால் லட்சக்கணக்கான உயிர்களை  அணுவாயுதமூலம் காவுகொண்ட அமரிக்கா இன்று மக்களின் காவலனாம்,உலகில் பல நாடுகளை அடக்கி அடிமைகளாக்கி பொருளாதாரங்களை திருடிய பிரித்தானியா,பிரான்ஸ்,ஒல்லாந்து போன்ற நாடுகள் இன்று நீதிபதிகள்!!உயிரழிவுகளை கண்டு இவர்கள் வடிக்கும் கண்ணீர் ஆடு நனைகையில்  ஓநாய் அழுவதாகும்.இவர்களின் ஆயுத வல்லமை அனைவரையும் ஊமையாக்கி விடுவதால் இவர்கள்தான் தர்மவான்கள்!!காவலர்கள்,மனித உரிமைக்காப்பாளர்கள்.இவர்கள் மக்களை காப்பதாக சொல்லி யுத்தம் தொடுத்த நாடுகளில் அன்று இறந்த அப்பாவிகளைவிட இன்று இவர்களும் இவர்கள் ஆதரவு படைகளும் அதை எதிர்ப்பவர்கள் கொன்றதுமே அதிகம்(இராக்,அப்கான்).இப்போது லிபியா,சிரியா என இவர்களின் பசிக்கு பலியாகிறார்கள்.இவர்களின் கருத்தை எதிர்த்து வென்ற தலைமைகளில் இன்று என்சியவர்களில் அமரிக்காவுக்கு சவாலானவர்களில் கடாபியும் ஒருவர்(காஸ்ரோ மற்றவர்களில் இன்னும் இருப்பவர்).கடாபியின் எதிர்ப்பாளர்களை பணமூலம் தூண்டி கடாபியை அழிக்க அமரிக்கா செய்யும் முயற்சியில் மக்களே அழிகின்றானர்.லிபியாவில் இன்றும் கடாபிக்கே ஆதரவு அதிகம்,அதை அமரிக்க ஆதரவு ஊடகங்கள் மிக திறமையாக மறைத்து போலிப்பிரச்சாரங்கள் மூலம் ஊடக தர்மத்தையும் சாகடித்து வருகின்றனர்.அமரிக்க ஆதரவு நாடுகளும் ஒத்தூதுகின்றன.கிட்லர் யூதரை அழிப்பதாக ஓலமிட்ட இவர்கள் அன்று அபிரிக்க,ஆசியநாடுகளில் அதையே செய்ததுபோல இன்றும் தொடர்கின்றன.அதை நாமும் புரியாமல் பணத்துக்கு அடிபணிந்து வேடிக்கை பார்ப்பதுடன் கிட்லரை பாதகனாக்கி பிரிட்டனை புகழ்வதை தொடர்வோம்.கடவுள் வந்தால் கணக்கை முடிப்போம்.

No comments:

Post a Comment