Friday, March 25, 2011

தொடுகையும் தமிழர் கலாச்சாரமும்!!

மனிதனின் உடலுறுப்புக்களின் ஐம்பொறிகள்(ஐம்புலன்கள்)அடங்குகின்றன!அவையாவன கண்,காது,மூக்கு,வாய்,உடல்(பார்த்தல்,கேட்டல்,மணத்தல்,சுவைத்தல்,தொடுதல்)
ஆகும்.இங்கு உடலானது தொடுகை மூலமாக உணர்வுகளை அறிகின்றது.அவற்றை நரம்புகள் வாயிலாக  மூளைக்கும் பழகிய பின்னர் முண்ணானுக்கமாக அனுப்புகின்றது!!ஆகவேதான் நம் தமிழர் தொடுகையின் பரிபூரண தன்மைகளையும் அவற்றால் தோன்றும் உணர்ச்சிகளையும் நுணுகியாராய்ந்து அவற்றால் விளையக்கூடிய நன்மை தீமைகளையும் வகைப்படுத்தினார்கள்.தொடுகையினால் தொற்றுநோய்கள் பரவுவதையும் கண்டதால் வணங்கும் முறையை கூட மரியாதை செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தினர்!!இன்று நம்மவர் கைகளை குலுக்குவதன் மூலம் வெள்ளையனின் பரம்பரை போல இன்புறுகின்றனர்.அதன் மூலம் தொற்றுக்கள் ஏற்படுவதையும் மற்றவரின் உணர்வுகள் பரிமாறப்படுவதையும் அறிகின்றனரில்லை!!வெள்ளையர் வாயில் முத்தமிடுவதைக்கண்டு நம்மவரும் வாய்களை பிய்த்துக்கொள்கின்றனர்!!வாய்கள் சுத்தம் பற்றிய கவலைகள்  இவர்களுக்கு இருப்பதேயில்லை!!சிகரட் நாத்தம் போன்றவற்றையும் வாயால் பரவும் தொற்றுக்களையும் மறந்து குழந்தைகளுக்குக்கூட வாயில் முத்தம் வைக்கின்றனர்,அறிவுக்கு வேலை கொடுப்பதை நிறுத்தி,முன்னோர்களின் எச்சரிக்கைகளை பிற்போக்காக்கி வாழ்வையும் சுகாதாரத்தையும் சேதப்படுத்துகின்றனர்(காதலர்,தம்பதிகள் முத்தமிடுவது உனது இன்பத்திலும் துன்பத்திலும் நோயிலும் கூட எனக்குப்பாதி என்பதை குறிக்கவே)! போதாதென்றுசிறுவயதில் உடைகளால் மூடி பிள்ளைகளை கலாச்சாரம் என்று கொடுமைப்படுத்தும்  பெற்றோர் வயதுக்கு வந்ததும் சிறுவயதில் போட்ட உடைகளையே பிள்ளைகள் அணியும்போது ஆதரிப்பது இன்று சகஜமாகி விட்டது!!அதாவது சிலர் பிள்ளைகள் கைக்குட்டையை உடையாக அணிவதை கூட பெருமையாக எண்ணுவதுடன் பறவைகள் தங்கக்கூடிய வளையங்களை காதுகளில் அணிவதையும் மார்புகளை பெரிதாக காட்டக்கூடிய உள்ளுடைகள் அணிவதையும் கண்டு பூரிப்பதுடன் தாமும் அவ்வாறு அணியவும் முயல்கின்றனர்!!
வயதுக்கு வந்த பிள்ளைகளை கண்டிக்க,தண்டிக்கக்கூட தந்தை தொடுவதை விரும்பாத காலம் ஒன்றும் இருந்தது.அதை சந்தேகக்குணம் என்று சொல்லி இன்று தந்தையும்(மது போதையிலிருந்தால் கூட,சாரமணிந்து) மகளும் ஒரே கட்டிலில் தூங்குவதும் காமக்கதைகள் பேசுவதும் முற்போக்காகி கதையல்ல நிஜம் நிகழ்ச்சியில் வருவதுவரை நீண்டுபோகின்றது!!அன்று அக்காவை நித்திரையில் கல்லெறிந்து எழுப்பிய தம்பி வம்பனாக,இன்றோ 
தம்பி மற்றும் அண்ணாக்களுடன்  தொட்டு கட்டியுருண்டு(மச்சான்,அண்டை  வீட்டு,பள்ளி நட்புக்களும் இங்கு அடங்கும்!!)
ஓட்டியுறவாடுவதும் அவற்றை பெற்றவர்களே படமாக்குவதும் கலாச்சார முன்னேற்றமாகி திரைமறைவில் சம்பவங்கள் புதைகுழிக்குள் மறைக்கப்படுவதும் சிசுக்கள் புதைக்கப்ப்டடுவதுமாக தமிழன் முன்னேறுகின்றான்.தொடுகை உணர்வுகளை கட்டுப்படுத்தாமலே பெண்நண்பிகள் கூட்டமாக கூத்தடிக்கின்றான்.வாழ்க தமிழன்,வளரட்டும் அந்நிய கலை,கலாச்சாரம். பெருகட்டும் தொற்றுக்கள்!!.

*தப்பை தாமே செய்வதும் பிடிபடுகையில் உறவுகளை மாட்டிவிடுவதும் இன்று தமிழரின் பொழுதுபோக்காகும்,இங்கு மாட்டப்படுவோர் தந்தை,அண்ணன்,தம்பி,மச்சான்,மாமா,சித்தப்பா,பெரியப்பா,தாத்தா,
பக்கத்து வீட்டுக்காரர்  என ஆண்களே!!

No comments:

Post a Comment