தொலைக்காட்சி!!

Saturday, March 26, 2011

26 -02 -2011 அன்று காலமான அமரர் திருவாளர் பொன்னையா கந்தையா அவர்களின் 31வது நினைவு நாள் வரும் புதனன்று(30)ஐரோப்பில்!!

அகதியந்தஸ்தும் அதற்கான விசாரணை என்ற கொடுமையும்!!

அகதி என்றால் குறிப்பிட்ட காரணிகளால் பாதிக்கப்பட்டு தனது இருப்பிடத்தில் இருந்தால் உயிரபாயம் ஏற்படும் என்பதால் இன்னொருவரிடம் அல்லது நாட்டில் அடைக்கலம் கேட்டவர்.இது சரியான வரைவிலக்கணம் என்றே நினைக்கின்றேன்.தனது பொருளாதாரம்,இடம் போன்றவற்றை இழந்து அல்லது விட்டுவிட்டு உயிரை காக்குமுகமாக பல சோகங்களை,துன்பங்களை,இழப்புக்களை சுமந்து இன்னொருவர் தயவில் வாழும் நிலைக்கு ஆட்பட்டவனே அகதி.உறவுகளைக்கூட இழந்த நிலையில் வருபவனை உண்மை அரவணைப்புடனே மனிதாபத்துடனே நடாத்துகிறார்களா  என்றால் ´இல்லை` என்பதே வேதனை தரும் கசப்பான உண்மை!!

அமரிக்க ஏகாதிபத்திய அராஜகமும் அதன் அடிவருடிகளின் நியாயப்படுத்தல்களும்!

Friday, March 25, 2011

தொடுகையும் தமிழர் கலாச்சாரமும்!!

மனிதனின் உடலுறுப்புக்களின் ஐம்பொறிகள்(ஐம்புலன்கள்)அடங்குகின்றன!அவையாவன கண்,காது,மூக்கு,வாய்,உடல்(பார்த்தல்,கேட்டல்,மணத்தல்,சுவைத்தல்,தொடுதல்)
ஆகும்.இங்கு உடலானது தொடுகை மூலமாக உணர்வுகளை அறிகின்றது.அவற்றை நரம்புகள் வாயிலாக  மூளைக்கும் பழகிய பின்னர் முண்ணானுக்கமாக அனுப்புகின்றது!!ஆகவேதான் நம் தமிழர் தொடுகையின் பரிபூரண தன்மைகளையும் அவற்றால் தோன்றும் உணர்ச்சிகளையும் நுணுகியாராய்ந்து அவற்றால் விளையக்கூடிய நன்மை தீமைகளையும் வகைப்படுத்தினார்கள்.தொடுகையினால் தொற்றுநோய்கள் பரவுவதையும் கண்டதால் வணங்கும் முறையை கூட மரியாதை செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தினர்!!இன்று நம்மவர் கைகளை குலுக்குவதன் மூலம் வெள்ளையனின் பரம்பரை போல இன்புறுகின்றனர்.அதன் மூலம் தொற்றுக்கள் ஏற்படுவதையும் மற்றவரின் உணர்வுகள் பரிமாறப்படுவதையும் அறிகின்றனரில்லை!!வெள்ளையர் வாயில் முத்தமிடுவதைக்கண்டு நம்மவரும் வாய்களை பிய்த்துக்கொள்கின்றனர்!!வாய்கள் சுத்தம் பற்றிய கவலைகள்  இவர்களுக்கு இருப்பதேயில்லை!!சிகரட் நாத்தம் போன்றவற்றையும் வாயால் பரவும் தொற்றுக்களையும் மறந்து குழந்தைகளுக்குக்கூட வாயில் முத்தம் வைக்கின்றனர்,அறிவுக்கு வேலை கொடுப்பதை நிறுத்தி,முன்னோர்களின் எச்சரிக்கைகளை பிற்போக்காக்கி வாழ்வையும் சுகாதாரத்தையும் சேதப்படுத்துகின்றனர்(காதலர்,தம்பதிகள் முத்தமிடுவது உனது இன்பத்திலும் துன்பத்திலும் நோயிலும் கூட எனக்குப்பாதி என்பதை குறிக்கவே)! போதாதென்றுசிறுவயதில் உடைகளால் மூடி பிள்ளைகளை கலாச்சாரம் என்று கொடுமைப்படுத்தும்  பெற்றோர் வயதுக்கு வந்ததும் சிறுவயதில் போட்ட உடைகளையே பிள்ளைகள் அணியும்போது ஆதரிப்பது இன்று சகஜமாகி விட்டது!!அதாவது சிலர் பிள்ளைகள் கைக்குட்டையை உடையாக அணிவதை கூட பெருமையாக எண்ணுவதுடன் பறவைகள் தங்கக்கூடிய வளையங்களை காதுகளில் அணிவதையும் மார்புகளை பெரிதாக காட்டக்கூடிய உள்ளுடைகள் அணிவதையும் கண்டு பூரிப்பதுடன் தாமும் அவ்வாறு அணியவும் முயல்கின்றனர்!!
வயதுக்கு வந்த பிள்ளைகளை கண்டிக்க,தண்டிக்கக்கூட தந்தை தொடுவதை விரும்பாத காலம் ஒன்றும் இருந்தது.அதை சந்தேகக்குணம் என்று சொல்லி இன்று தந்தையும்(மது போதையிலிருந்தால் கூட,சாரமணிந்து) மகளும் ஒரே கட்டிலில் தூங்குவதும் காமக்கதைகள் பேசுவதும் முற்போக்காகி கதையல்ல நிஜம் நிகழ்ச்சியில் வருவதுவரை நீண்டுபோகின்றது!!அன்று அக்காவை நித்திரையில் கல்லெறிந்து எழுப்பிய தம்பி வம்பனாக,இன்றோ 
தம்பி மற்றும் அண்ணாக்களுடன்  தொட்டு கட்டியுருண்டு(மச்சான்,அண்டை  வீட்டு,பள்ளி நட்புக்களும் இங்கு அடங்கும்!!)
ஓட்டியுறவாடுவதும் அவற்றை பெற்றவர்களே படமாக்குவதும் கலாச்சார முன்னேற்றமாகி திரைமறைவில் சம்பவங்கள் புதைகுழிக்குள் மறைக்கப்படுவதும் சிசுக்கள் புதைக்கப்ப்டடுவதுமாக தமிழன் முன்னேறுகின்றான்.தொடுகை உணர்வுகளை கட்டுப்படுத்தாமலே பெண்நண்பிகள் கூட்டமாக கூத்தடிக்கின்றான்.வாழ்க தமிழன்,வளரட்டும் அந்நிய கலை,கலாச்சாரம். பெருகட்டும் தொற்றுக்கள்!!.

*தப்பை தாமே செய்வதும் பிடிபடுகையில் உறவுகளை மாட்டிவிடுவதும் இன்று தமிழரின் பொழுதுபோக்காகும்,இங்கு மாட்டப்படுவோர் தந்தை,அண்ணன்,தம்பி,மச்சான்,மாமா,சித்தப்பா,பெரியப்பா,தாத்தா,
பக்கத்து வீட்டுக்காரர்  என ஆண்களே!!

ஒன்று போனது மூன்று சேர்ந்தன!!

பிறந்தநாள் குழந்தைகளும் புலவனும்


Wednesday, March 23, 2011

நாளைய தினம் எனது வாழ்வின் திசை மாறுவதற்கு உதவுமா?

எனது பதினெட்டுவருட போராட்டம் ஈழத்தமிழரின் போராட்டம் போல மீண்டும் ஆரம்ப புள்ளிக்கு போகாமல் இழந்தவை இழந்தாதாக இனிவரும் காலம் இல்லாமை ஒழிய எல்லாம் வல்ல ஈஸ்வரனும் காவல் தெய்வமாம் கண்ணனும் அருள அனைத்துக்கும் முதல் வணக்கத்துக்குமுரிய அந்த கரிமுகனும் தம்பிகளும் அருள்மழை பொழிய கல்வியையும் வீரத்தையும் ஓரளவேனும் தந்த சக்தி வற்றாத செல்வத்தையும் தந்துதவிட இன்றே வேண்டுகிறேன்.ஸ்ரீயை பறித்தவளே மீண்டும் உன்னருளாம் நவ சக்திகளும் வந்திட அருள் தந்திடம்மா காளியாச்சியே!!

Tuesday, March 22, 2011

Friday, March 18, 2011

பெண்ணே எங்கிருந்தாலும் வாழ்க!!ஒருவனுடன் மட்டும் உறவாடுக!!

நீயாக வந்தாய்,நெருப்பில் கைவைத்தாய்,தாயாகி நின்றேன்,பேயாகி பிரிந்தாய்!!பொய்யான காதலினால் என்னை பேதையாக்க நினைத்தாய்,உன் உண்மை முகம் கண்டபோது என் குலமே தலை குனிந்ததடி.எத்தனை பேரை மாற்றினாய்,எள்ளளவும் கவலையில்லாமல்!!காதலுக்கு அர்த்தம் உனக்கு மட்டுமல்ல உன் பரம்பரைக்கும் புரியாதடி,பணத்தை கண்டால் உன்னை பெற்றவர் உன்னை விற்றவர்!!அழகான வாலிபரை கண்டால் நீ விலைபோகும் மாது!!ரோஜா என்று உனக்கு பெயரிட்டதாலா  பலரிடம் பறிபோனாய்?,தப்பியது நானென்றாலும் பறிபோனதென்னவோ என் குடும்ப மானமே!!முத்தம்?!முதல் முத்தம்-நாம் விரும்பும் ஒருவரிடம் பெற்ற முதலாவது உணர்வுள்ள முத்தம்,முதல் காதல்-நாம் ஒருவரை கண்டவுடன் வரும் முதலாவது உணர்வு,அவரையே நினைத்து உருகுவது!!
உனது காதலோ!!??முதலாமவரிடம் பெற்றது முதல் முத்தம்....முதலாமவரை காதலித்தது முதல் காதல்!!எப்படி உங்களால் மட்டும் மனதிலும் படுக்கையிலும் பலரை பகிர முடிகிறதோ!!கில்லாடிகளடி நீங்கள்!!அன்னையாகையில் தெய்வமாகும் பெண்ணே காதலி என்கையில் பேய்களடி நீங்கள்!!

நிச்சயதார்த்தம் மருமகளுக்கு,மாமனுக்கு தெரியுமா?!!