தொலைக்காட்சி!!

Monday, February 28, 2011

திரு பொன்னையா கந்தையா அவர்களின் மரண அறிவித்தல்!!திருவாளர் பொன்னையா கந்தையா
பிறப்பு : 10 -08 -1930    இறப்பு: 26 -02 -2011

அளவெட்டியை செட்டிச்சோலையை   சேர்ந்த திருவாளர் பொன்னையா கந்தையா அவர்கள் 26 -02 -2011  மாலை காலமானார்.
இவர் பூமணி கந்தையா வின் அன்புக்   கணவரும் - மயில்வாகனம், வள்ளிநாயகி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச்  சகோதரனும் -  சாந்தகுமாரன், ஜெயகுமாரன், நந்தகுமாரன், தேணுகா ஆகியோரின் அன்புத் தந்தையும் -  தர்சினி, வசந்தனா   , மாலா, விபுலானந்தன் ஆகியோரின் அன்பு  மாமனும் - சுபாசினி, டினேஸ், உமேஷ், சுதேசினி, ரஜீவன், மெலானி , கிருத்திகா, தர்சிகா, கௌசிகா, மோனிஷா, மதுஷா,கிரியன், மகிஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்  ஆவார்.
மற்றும் உறவுகள் ; சகோதரங்கள், மச்சான் மார்கள் , மச்சாள் மார்கள், மாமன்மார்கள், மருமக்கள், பேத்தி, பேரன் மற்றும் தெரிந்து அறிந்தவர்களுக்கும் அறியத் தருகின்றோம்.
இவரது ஈமைக்கிரிகைகள்  27 -02 -2011 இல்லத்தில் நடைபெற்று  at மாலை 15 .00 மணி அளவில் கேணிப்பிட்டி  இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்  என்பதை அறிய தருகின்றோம்.  

தொடர்புகளுக்கு  :
சாந்தகுமாரன் ( Holland  ): 0031 -0619644386
ஜெயகுமாரன் ( Germany ): 0049 -02325585419
நந்தகுமாரன் ( Srilanka - Jaffna ): 0094 -0212222699
தேணுகா ( France ): 0033 -0476491027

Monday, February 21, 2011

மலேசியா வாசுதேவன் காலமானார்

[ Sunday, 20 February 2011, 10:43.43 AM GMT +05:30 ]
பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில்  காலமாகியுள்ளார்.
அண்மைக்காலமாக சுகவீனமடைந்த நிலையில் சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர்,  சிகிச்சை பலனளிக்காத நிலையில் இன்று காலமாகியுள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகரான மலேசியா வாசுதேவன் கடந்த 25 ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப் பாடல்களைப் பாடியுள்ளார்.   'பூங்காற்று திரும்புமா.. என் பாட்டை விரும்புமா''   'ஆசை நூறு வகை வாழ்வின் நூறு சுவை''  போன்ற ஏராளமான பாடல்களை  பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
மேலும் இவர்  முதல் வசந்தம், ஊமை விழிகள்,  திருடா திருடா உட்பட 85க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன், இவர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இவரது மகன் யுகேந்திரன்  பின்னணிப் பாடகராகவும்இ நடிகராகவும் இவரது மகள் பிரசாந்தினி பின்னணிப் பாடகியாகவும் உள்ளனர்.

பார்வதியம்மா காலமானார்


[ ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011, 02:56.15 AM GMT ]
தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதிப்பிள்ளை(பார்வதியம்மா) அவர்கள் இன்று காலை காலமானார் என்பதை மிக மன வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்.
கடந்த பல மாதங்களாக கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழீழத்தாய் இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமானார்.
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
கடந்த பத்து வருடங்களாக பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.
பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்த போதில் அவரது குடும்பத்தினர் அதற்கு உடன்படாமையாலும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை.
இதனால், பார்வதி அம்மாள் அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
பார்வதியம்மா காலமானார்

Wednesday, February 16, 2011

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைக்கு எதிராக வழக்கு


விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள தடைக்கு எதிராக வழக்கு
[ புதன்கிழமை, 16 பெப்ரவரி 2011, 06:19.56 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கிக் கொள்ளக் கோரி மிக விரைவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
நெதர்லாந்து பிரபல வழக்கறிஞர் விக்டர் கோப் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் ஏராளம் வாதங்களை முன் வைக்கவும் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் சம உரிமை கொண்டவர்கள் என்ற நிலையில், ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேசப் பிரகடனங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் தமிழ்  மக்களின் விடுதலைக்காகப் போராடியவர்கள் என்ற ரீதியில் அந்த இயக்கத்தின் மீது தடை விதிக்க முடியாது என்பது அவர் முன் வைக்கும் பிரதான வாதமாகும்.
அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்ய எடுத்துள்ள தீர்மானம் தவறானது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து, தடையை நீக்கிக் கொள்ள  வைப்பது விக்டர் ஹோப்பின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tuesday, February 15, 2011


இது ஒரு 2008 ஆண்டு September வந்த செய்தி

தண்ணீரை எரிபொருளாக கொண்டு காரை இயக்கும் தொழிநுட்பத்தை கண்டு பிடித்து உள்ளார் இலங்கை வாலிபர் ஒருவர்.

இவரின் பெயர் துஷார எதிரிசிங்க.

இவர் சோதனை முயற்சியாக மூன்று லீற்றர் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி 300 கிலோ மீற்றர் தூரம் பயணித்து உள்ளார்.

தண்ணீரில் இயங்கக் கூடிய இக்காரின் முக்கியமான விசயம் சூழலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புகையை கக்காது.

ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்கள் இவரின் தொழிநுட்பத்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ளன.

ஆனால் தாய் நாட்டுக்குத்தான் இத்தொழிநுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இவர் உறுதியாக உள்ளார்.

ஆயினும் இவருக்கு தாய் நாட்டில் உதவி செய்ய எவரும் முன் வரவில்லை என்பது மன வருத்தத்துக்கு உரிய விடயம்.

Wednesday, February 9, 2011

பெண்களின் நிர்வாண உடலில் ஓவியம் தீட்டும் கில்லாடி(வீடியோ இணைப்பு)


பேசும் கலைகளில் ஒன்றாக இந்த ஓவியம் இருந்து வருகின்றது. என்ன தான் உலகம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைத்தாலும் ஒவியத்திற்கான மவுசு இன்னும் குறையவில்லை.

Monday, February 7, 2011

சரித்திரத்தில்நிரந்தர இடம் பிடித்த உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் மகாத்மா காந்தி

சரித்திரத்தில்நிரந்தர இடம் பிடித்த உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் மகாத்மா காந்தி gandhi2உலக சரித்திரத்தில் நிரந்தர இடம் பிடித்துள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களில் முதல் 25 தலைவர்கள் பட்டியலில் மகாத்மா காந்தி, மொகலாயப் பேரரசர் அக்பர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் வெளியாகும் `டைம்' பத்திரிகை சார்பாக, உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்களில் மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அமெரிக்காவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரொனால்டு ரீகனின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு அந்த பட்டியலை `டைம்' வெளியிட்டது.

அதன்படி, முதல் 25 இடங்களை பெற்றுள்ளவர்களின் பட்டியலில் இந்தியா சார்பாக தேசப்பிதா மகாத்மா காந்தி மற்றும் மொகலாய பேரரசர் அக்பர் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. காந்தியை பற்றிய குறிப்பில், அவருடைய அகிம்சை வழி போராட்டத்தை பற்றி புகழ்ந்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் வக்கீலாக பணியாற்றியது. இந்தியாவில் நேருவுடன் இணைந்து சுதந்திரத்துக்கு போராடியது, உப்பு சத்தியாகிரகம் உள்ளிட்ட தகவல்களும் கூறப்பட்டுள்ளன.

வரலாற்று பேரரசர்கள்

இதுபோல, 16-ம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆட்சி செய்த மொகலாய பேரரசர் அக்பர் பற்றியும் புகழ்ந்து கூறப்பட்டிருக்கிறது. அதில், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தியாவில் முஸ்லிம் பேரரசராக இருந்தபோதிலும் மதசார்பற்ற தன்மையை கடைப்பிடித்து அனைவரையும் அரவணைத்து சென்றதாக அக்பர் குறித்து எழுதப்பட்டுள்ளது.

உலகின் தலைசிறந்த 25 நிரந்தர தலைவர்கள் பட்டியலில் கிரேக்க பேரரசர் மாவீரன் அலெக்சாண்டர், சீன தலைவர் மாவோ சேதுங்  , மங்கோலிய பேரரசர் செங்கிஸ்கான், ரஷிய தலைவர் லெனின், புரட்சியாளர் சே குவாரா  இங்கிலாந்து முன்னாள் பிரதமர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரெட் தாட்சர், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் ஆபிரகாம் லிங்கன், ரீகன், மற்றும் திபெத் மதத் தலைவர் தலாய் லாமா, நெல்சன் மண்டேலா சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி, ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
 

Tuesday, February 1, 2011

இன்று நாகேஷ் நினைவு நாள்.

[ 2011-01-31 19:52:45  ]

த‌மிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிக‌ர். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.

நாகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகேஷ் கன்னடப் பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாத்வர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். தந்தை கர்நாடகாவில் அரிசிக்கரே என்ற ஊரில் தொடருந்து நிலைய அதிபராகத் தொழில் பார்த்தவர். நாகேசின் முழுப்பெயர் நாகேசுவரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்.

தாராபுரத்தில் தனது எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின.

நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் பணிபுரிந்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார். மணியன் எழுதிய ´டாக்டர் நிர்மலா´ நாடகத்தில், ´தை தண்டபாணி´ என்ற பாத்திரத்தில் "தை, தை" என்று நோயாளியாய்க் மேடையில் குதித்ததால், ´தை நாகேஷ்´ என்றும் பின்னர் ஆங்கிலத்தில் Thai என்பதை ´தாய்´ என்று மாற்றி படித்ததால் இவர் "தாய் நாகேஷ்" என அழைக்கப்பட்டார்.

1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். [[தாமரைக்குளம் (திரைப்படம்)|தாமரைக்குளம்] என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.

கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்

திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

நீ‌ர்‌க்கு‌மி‌ழி என்ற படத்தில் நாகேஷை கதாநாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் கே. பாலச்சந்தர். அந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர் நாகேஷ் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. தேன்கிண்ணம், நவக்கிரகம், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, யாருக்காக அழுதான், அனுபவி ராஜா அனுபவி போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார். அதற்குப் பின் பல கமலஹாசன் படங்களில் நாகேஷ் நடித்தார். மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் போன்றவை சில படங்கள். நாகேஷ் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும், இதுவும் கமலஹாசன் படமாகும்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ஒல்லாந்து ராணி பல்லாண்டுபல்லாண்டு வாழ்க

1feb 1968 பிறந்தநாள்

அப்பா என்று ஒல்லாந்துநண்பர்களால் அன்பாக அழைக்கப்படும் நெல்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்,அவர் குடும்பமாக நல்வாழ்வு வாழ நண்பர்கள் வாழ்த்துகின்றனர்,அவர் wassanaar என்ற இடத்தில் இன்று வெகு சிறப்பாக பிறந்தநாளை கொண்டாடுகின்றார்,அவருக்கும் அவரை போல பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!