Saturday, January 15, 2011

பொங்கல்


பொங்கல் என்பது உழவர் திருநாளாகும்,அதை சூரியனுக்கு நன்றி சொல்ல உழவரும் உழவருக்கு நன்றிசொல்ல மற்றவரும் பொங்கி கொண்டாடுவர்,அடுத்தநாள் பட்டிப்பொங்கலாகும்,இது உழவுக்கு பேருதவியாகவிருந்த மாட்டுக்கு நன்றி சொல்லும் விழாவாகும்,இன்றைய அறிவாளிகள் அதை கொச்சைப்படுத்தி இந்து,தமிழர் விழா,புத்தாண்டு என்றெல்லாம் கதை சொல்கிறார்கள்,எது எவ்வாறாயினும் தமிழர்,இந்துக்களில் உழவரும் அடங்குவர் என்பதே உண்மை!!எதையும் செய்யாமல் செய்பவரையும் பழமையையும் குறை கூறியே தமிழன் தன்னாலேயே தாழ்ந்தது போனான்,இன்றிலிருந்து திருந்துவான் என்று எண்ணுகின்றேன்.புதுமைகளை செய்வதுடன் பழமையின் உயர்வையும் உண்மையையும் அறிவானாயின் உயர்வான் தமிழன் என்பது திண்ணம்.

No comments:

Post a Comment